முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 21 சதவீத மக்கள் பலன்

பிரதமரின் கனவுத்திட்டமான முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 21 சதவீத மக்கள் பலன்அடைந்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப்காந்த் கூறியுள்ளார்.

நாட்டின் செயல்திறன் மிக்க மாவட்டங்களை தேர்வுசெய்து அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திரமோடி முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் மாற்றங்களைக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கபட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்கும் இத்திட்டத்தை ஐநா அமைப்பின் மேம்பாட்டு திட்டப்பிரிவு ஆய்வுசெய்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இத்திட்டத்தினால் இந்தியமக்கள் தொகையில் 21 சதவீதத்தினரின் வாழ்க்கையில் வளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் நல்லமுன்னேற்றம் காணப்படுகிறது என்றும் பாராட்டியுள்ளது. இந்ததிட்டம் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வினையூக்கியாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த அறிக்கை குறித்து நிதி ஆயோக்அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய இத்திட்டம் குறித்து ஐ.நா. சுதந்திரமான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கை முடிவுகளைப் பார்க்கும்போது இத்திட்டத்தில் பங்காற்றியது குறித்து பெரும் மனதிருப்தி ஏற்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபங்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் மிகநீண்ட பயணமாகும். இத்திட்டத்தின் இலக்கு குறித்தும், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவான தொலை நோக்கு பார்வை பிரதமருக்கு இருந்தது.

இத்திட்டம் குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனைகளின் போது முன்னோடி மாவட்டங்களின் ஆதாரங்களில் கவனம் செலுத்துவதை விடவும் முக்கியம், மாவட்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம்செலுத்துவது என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் செயல்பாடுகளை, கட்டமைப்பை உருவாக்க சிலமாதங்கள் தேவைப்பட்டன.

தற்போது இத்திட்டம் நாட்டின்வேர்களில் மாற்றங்களைச் சாத்தியப் படுத்தியுள்ளது. இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பலபின்தங்கிய மாவட்டங்களிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். –

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...