ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துவிஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறியுள்ளாா்.

முன்னதாக, ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் மறுஆய்வு செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய்சிங் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ரவிசங்கா் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்முகாஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இந்நிலையில், எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைத்தால், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கிளப்ஹவுஸ் சமூகவலைதளத்தில் பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா். இவா் பாகிஸ்தானை சோ்ந்தவா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அந்த கேள்விக்கு மத்தியபிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் ஆடியோ வடிவில் அளித்தபதிலில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தபோது அந்நடவடிக்கையில் ஜனநாயகம் காணப்பட வில்லை; மனித நேயமும் காணப்பட வில்லை. மாநிலத்தின் பெரும்பாலான தலைவா்களை மத்திய அரசுசிறையில் அடைத்தது. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதும், சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததும் சோகம் தரக்கூடிய முடிவு. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக மறு ஆய்வு செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுட்டுரையில் இதுதொடா்பாக ரவிசங்கா் பிரசாத் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துதொடா்பாக மீண்டும் சா்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் எழுப்பியுள்ள இந்தசா்ச்சை தொடா்பாக காங்கிரஸ் தலைமை எவ்வித பதிலிலும் தெரிவிக்காமல் மௌனம்காத்து வருகிறது. திக்விஜய் சிங் கூறியதுபோல மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப் பட்ட பிறகு ஜம்முகாஷ்மீா் மட்டும் லடாக் பகுதியில் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி சிறப்பான நிா்வாகம் உள்ளது. இருயூனியன் பிரதேசங்களின் தொலைதூர கிராமங்களுக்கும் கரோனா தடுப்பூசி கொண்டு சோ்க்கப் பட்டுள்ளது. இதுதான் நல்ல நிா்வாகத்தின் அடையாளம்’ என்று கூறியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...