கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத் தொடர்களும் முன்கூட்டியே நிறைவடைந்தது. மேலும் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப் பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோதிலும், ஐந்து மாநில சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால (Monsoon Session of Parliament) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிகிறது. இந்த கூட்டத் தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இருசபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். மேலும் மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
புதிய எம்பிக்கள் (MP) பதவி ஏற்றபின் உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், அமைச்சர்களை அறிமுகம் செய்யவேண்டிய தேவை இல்லை எனக்கூறியதோடு, பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷங்களை எழுப்பினர். இதை கடுமையாக கண்டித்துபேசிய பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர். இதனை ஜீரணித்துகொள்ள முடியாத எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்புகிறார்கள் என கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) புதிய அமைச்சர்களை அறிமுகம்செய்யும் போது அவையில் எதிர் கட்சிகள் கோஷம் எழுப்பியதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கண்டித்தார்.
ஆனால் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால, அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவைபிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப் படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |