மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகள் திருடர்களா?

தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியிலும் உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து, மின்சார பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அனுமதி இல்லாமல் ஆற்றுநீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்

கடந்த ஜூலை 8ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

விளைச்சல் இல்லாமல் மன உளைச்சலில் சிரமப்படும் விவசாயிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று நா கூசாமல் கூறுவது கண்டிக்கத்தக்கது.

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியமைச்சர், ‘திருடர்கள்’ பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் நீரை எடுத்து சென்று உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குளிர்பானம் தயாரிப்பு, அல்லது குடிநீர் புட்டிகள் தயாரிப்புத் தொழிலுக்கு பயன்படுத்தவில்லை.

விவசாயிகள் தங்கள் வயலில் இருக்கும் கிணறு, போர்வெல்லிருந்து தண்ணீரை குழாய் மூலம் தொலைவில் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது என மாண்புமிகு நிதி அமைச்சர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு ஆற்றில், வாய்க்கால் இருந்து முறைகேடாக எடுத்தவர் மட்டும் பொருந்துமா அல்லது இதுவரை தண்ணீர் பைப் லைன் மூலம் விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தாலும் கூட இனிமேல் அப்படி எடுத்துக் செல்ல முடியாமா என்பது அதிகாரிகளுக்கே விளங்கவில்லை. ஆகவே தமிழக நிதி அமைச்சரின் தடாலடி உத்தரவினால்

வயல், ஆற்றுக்கு, வாய்க்கால் அருகில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் அனைத்து விவசாயிகளும் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக விவசாயிகளையும் விவசாய உற்பத்தி பொருள்களையும் பாதிக்கும் நிதியமைச்சரின் நடவடிக்கையை முதல்வர் தடுத்து நிறுத்தி, ஏழை விவசாயிகளின், அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீர் ஆதாரம் வேண்டும் என்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகவே முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...