முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மண்ணிப்பு கேட்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டுவதற்குமுன், அக்.29ம் தேதி கேரள அமைச்சர்கள் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசுஅனுமதியின்றி, கேரள அரசு அணையை திறந்ததாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தான் அணையை திறந்தது என்றும், கேரள அமைச்சரும், அதிகாரிகளும் உடனிருந்தனர் என்றும் கூறினார்.
இதேபோல், பேபி அணையை வலுப்படுத்திய பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அதன் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டிஅகற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, அந்த 15 மரங்களை வெட்டுவதற்கு கேரளவனத்துறை அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுஅறிக்கையில் தெரிவித்திருந்தார். கேரள அரசுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீர்திருப்பமாக பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்படுவதாக கேரள வனத் துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
மரங்களை வெட்ட தமிழகஅரசுக்கு அனுமதி வழங்கியதற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால் அனுமதியை திரும்பபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறும்போது, முல்லைப் பெரியாறு அணையில்இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புகேட்க வேண்டும்.
அணையில் 142அடிக்கு தண்ணீர் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில் பாஜகவின் போராட்டம்தொடரும். இல்லையெனில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஒரு லட்சம்பேருடன் சென்று தமிழக பாஜக முற்றுகையிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், பேபி அணைக்கு கீழேஉள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதாக நன்றி கடிதம்எழுதிய தமிழக முதல்வரின் செயல் வடிவேலுவின் நகைச்சுவை போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |