இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் கிஷான்சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டம்மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மத்திய அரசு, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்ததிட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 9- வது தவணையாக 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 19,500 கோடியை நாளை (09/08/2021) காலை 11.00 மணிக்குநடக்கும் காணொளி நிகழ்ச்சியில் டெல்லி இருந்தவாறே பிரதமர் நரேந்திரமோடி விடுவிக்கிறார். அப்போது விவசாயிகளுடன் காணொளிமூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக தகவல் கூறுகின்றன.
நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூபாய் 2,000 என விவசாயிகள் வங்கி கணக்கில் இதுவரை ரூபாய் 1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |