எதிர் கட்சிகளை பீதியில் ஆழ்த்திய “இந்தியா டுடே”

எதிர் கட்சிகளை பீதியில்ஆழ்த்திய “இந்தியா டுடே” கருத்துக் கணிப்பு “இந்தியா டுடே” இதழ் ஒருகுறிப்பிட்ட இடைவெளியில் “தேசத்தின் மனநிலை” (Mood of the nation) என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. அதேபோல் அண்மையில், இந்தியா டுடே குழுமமும், கார்வி இன்சைட் நிறுவனமும் இணைந்து (ஜூலை 15 2021 முதல் ஜூலை 27 2021 வரை) ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

#ஒரு பிரதமராக மோதிஜியின் செயல்பாடு எப்படி என்ற கேள்விக்கு மிகச் சிறந்தது என்று 30% பேரும் நன்று (Good) என்று 48% பேரும் சராசரி (Average) என்று 17% பேரும் மோசம் (poor) என்று “5% பேர்” கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

அதாவது 78%பேர் “சிறந்தது”என தெரிவிக்கின்றனர். “மோசம்” என தெரிவித்தவர்கள் வெறும் 5% பேர்தான்.#இந்தியாவின் ஆகச் சிறந்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு மோதி என்று 44% பேரும் வாஜ்பாய் என்று 14% பேரும் இந்திரா காந்தி என்று 12% பேரும் நேரு என்று 7% பேரும்
மன்மோகன் என்று 7% பேரும் ராஜிவ் என்று 4% பேரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

#பிரதமராக இருக்க மிகவும் பொருத்தமானவர் யார்? என்ற கேள்விக்கு
மோடி என்று 66% பேரும்
ராகுல் காந்தி என்று 8% பேரும்,
சோனியா காந்தி என்று 5% பேரும்
கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
ஜனவரியில் 2020ல் நடைபெற்ற இதே கருத்து கணிப்பில், அடுத்த பிரதமராக இருக்க யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோதிஜிக்கு ஆதரவாக “53%” பேரும், ராகுலுக்கு ஆதரவாக “13%” பேரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ராகுல் காந்தி: 8%, சோனியா காந்தி: 5%. இப்போது ராகுல் காந்தி ஒற்றை இலக்கத்திற்குப் போய்விட்டார். மோதிஜிக்கான ஆதரவு 15% கூடியுள்ளது.

கொரோனா தொற்றை எப்படி மோதிஜி எதிர் கொள்கிறார் என்ற கேள்விக்கு “77%” மக்கள் திருப்தியாக இருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதில் “48%” பேர் மிகவும் நன்றாக கையாள்வதாக தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தை மோதிஜி எப்படி கையாள்கிறார் என்ற கேள்விக்கு நன்றாக கையாள்கிறார் என்று “72%” மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவை நம்ப வேண்டாம் என “84%” மக்களும் சீனபொருட்கள் மீதான தடை தேவை என “91%” மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர் சென்ற ஜனவரி 2020 கருத்துக் கணிப்பை விட பிரதமர் மோடிஜிக்கான ஆதரவு 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...