அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்பதை ஏற்க கூடாது

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதல் முறையாக நேற்று புதுச்சேரி சென்றார்.

புதுச்சேரி பாஜக தலைமைஅலுவலகத்தில் மாநில தலைவர் சாமி நாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் நிர்வாகிகளை அவர் சந்தித்துபேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அனைத்து மாநிலபாஜகவுக்கு உத்வேகம் தரக்கூடிய பாஜகவாக புதுச்சேரி பாஜக மாறியிருப்பதாக தெரிவித்தார்.

“புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அற்புதமான, வித்தியாசமான ஆட்சியை புதுச்சேரி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன்பிருந்த முதல்வரால் எந்த வேலையும் செய்யமுடியவில்லை என்றால் மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் பழிபோடுவதை பார்த்து கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமான முறையில் ஓர் ஆட்சிநடக்கிறது. இதற்கு பாஜக கூட்டணியில் முக்கிய காரணமாகும். இதே உத்வேகத்தில் தமிழகத்திலும் பாஜகவை வளர்க்க அரும்பாடுபடுவோம்.”

“புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்குவராது, மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், தாமரைமலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். பாஜகவை நம்பியும், அதன் தலைவர்களை நம்பியும் வாக்களித்து, அதனுடைய பலனை இங்குள்ளமக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்திருக் கிறார்கள். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவை பார்த்து கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்றகாலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியை பிடிப்போம்,” என்றார்‌அண்ணாமலை.

“தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்புவழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை திறக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால், அசாதாரணமான சூழ்நிலையில் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். இதனால் எல்லா குழந்தைகளுக்கும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே பள்ளி திறப்பை பாஜக வரவேற்கிறது,”

விநாயகர் சதுர்த்திக்கு தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்து கொள்ளலாம். ஆனால், கூட்டமாகசெல்ல அனுமதியில்லை என்று தமிழக  அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேமாதிரிதான் இருந்தது. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விழாவை நடத்திக் காட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

“டாஸ்மாக்கை திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது,” என‌ அண்ணாமலை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கட்சி தலைவரின் பெயரில் ஒரு வீடியோ வெளி வந்துள்ளது. அதற்கு ஒரு குழு போட்டுள்ளோம். அந்த குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்,”

“அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னைசந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. அவர் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சிசார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்.

 

“அவர் அந்த வீடியோவை கொடுக்க ஆர்வமில்லாமல் வெளியிட்டுள்ளார்.  அது சம்பந்தமாக குழு அமைத்து, அந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அக்குழு நடவடிக்கை எடுக்கும்,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...