மேகேதாட்டு அணையை கட்டியேதீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரியின்குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதியமுதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம்தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கர்நாடக முதல்வரின் பேச்சை கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்றுகூறியதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நதியால் பயன் பெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி பெறாமல் கர்நாடகாவில் அணைகட்ட முடியாது. மேகேதாட்டுவில் அணை கட்ட ஒரு செங்கலைக் கூட எடுத்துவைக்க அனுமதிக்க மாட்டோம்.
அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.அம்மாநில முதல்வரின் பேச்சால் தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைபோக்கி, நம்பிக்கை ஏற்படுத்த, தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |