*திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்:*
மேடைகளில், தொலை காட்சி. விவாதங்களில் , ராஜன்குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களை பொடி பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட்முடிவுகள்.*
பொய்# 1:
நீட் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.
முடிவுகள்சொல்லும் உண்மை:
*இந்தாண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநிலபோர்ட்களில் படித்தவர்கள்.*
பொய்# 2:
அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது கடினம்.
முடிவுகள் சொல்லும் உண்மை:
*திருச்சியில் மட்டும், அரசுநடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*
பொய்#3
அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட்தேர்வில் தகுதி பெற முடியாது. முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)
*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* *மூவருமே முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*
பொய்#4
கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்தேர்வு. முடிவுகள்சொல்லும் உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறியபெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைசேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதிபெற்றுள்ளார்.* அரசு மருத்துவ கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக்கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.
பொய்# 5:
தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு கடினமானது.
முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்தஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*
*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*
அனைவரும் அறியவேண்டியது:
*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*
செய்ய வேண்டியது: #1
நீதிமன்றத்தில் இந்ததரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவவேண்டும்.
#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.*
செய்வார்களா?
இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக் காட்சிகள் அலசுவார்களா?
*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்* .🙏🙏
நன்றி……
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |