காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை தமிழக பாஜகவின் மீதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைதும். அவர் திறந்தவெளி கல்வியில் படித்து வந்த பிஏ பாடத்திற்கான பரீட்சையினை ஆள்மாறாட்டம் செய்து எழுதினார் என்ற புனையப்பட்ட குற்றச்சாட்டும்.

உண்மையில் கல்வி மாபியாக்களின் கூடாரம் தமிழகம் என்றால் அதன் ஊற்றுக்கண் திமுக என்று தான் கூற வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடு, குளறுபடி. மருத்துவம் பயில மதிப்பெண்ணை விட பணமே பிரதானம். பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற குறுக்கு வழியை நாடிய போதிலும். பேருக்கு கூட விசாரணை இல்லை. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்டியது. .

அண்ணா பல்கலைக்கழகதில் வினாத்தாள் திருத்தத்தில் நடந்த பல கோடி மதிப்பிலான முறைகேடுகளில் முகாந்திரம் இருந்த போதிலும், எந்த துறையும் விசாரணைக்கு துணியவில்லை. அதனை களைய மத்திய அரசின் வழிகாட்டலில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்ட சூரப்பா தேவைப்பட்டார்.

பல லட்சம் பேர் பங்கு கொள்ளும் தமிழ்நாடு அரசு பனியாளார் தேர்வாணைய தேர்விலும் நம்பக தன்மை இருப்பதாக தெரியவில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முறைகேடுகளை களைய எடுத்த முயற்சிகளில் கடுகலவை கூட திமுக ஆட்சியாளர்கள் செய்ததில்லை. தங்கள் ஆட்சியில் கட்சியினருக்கு அரசுப் பணியில் சலுகை என்று ஒரு அமைச்சர் வெளிப்படையாக கூறும் அளவில்தான் அவர்களின் நேர்மை உள்ளது.

இந்நிலையில் பெயரளவுக்கு பேருக்கு பின்னே அலங்காரமாக மட்டுமே கூடிய திறந்தவெளி கல்வியில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டாராம், அதை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். என்ற தோனியில் பொய் வழக்குப் புனைந்துள்ளார்கள். அப்படி தமிழகம் முழுவதும் உண்மையில் பரிசோதித்திருந்தாள் பலரும் சிக்கியிருப்பார்கள் என்பதே நிதர்சனம். காவல்துறை சமீபத்தில் சேலத்தில் விலைமதிப்பற்ற கனிமத்தினை கடத்தி சென்ற லாரியை விடுத்து, அதனை பின்தொடர்ந்த பத்திரிகையாளரை பிடித்த கதைதான். என்ன செய்ய ஆள்பவர்கள், ஆட்டி படைப்பவர்கள் அப்படி.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...