உக்‍ரைனின் அண்டை நாடுகளுக்‍கு செல்லும் அமைச்சரகள்

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்‍ரைனில் சிக்‍கியுள்ள இந்தியர்களை அதன் அண்டைநாடுகள் வழியே மீட்டுவரும் மத்திய அரசு, அப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்று கண்காணிக்க உள்ளனர்.

ரஷிய படைகளின் தாக்குதல்காரணமாக தங்கள் வான்எல்லையை உக்‍ரைன் மூடியதையடுத்து, அங்கிருந்து வெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்‍கிக்‍கொண்டனர். அவர்களை விமானம் மூலம் உக்‍ரைனிலிருந்து அழைத்து வர முடியாததால், தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து இந்தியாவுக்‍கு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்துவருகிறது.

இதற்காக ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு, சனிக்கிழமை முதல் இந்தியர்களை அழைத்துவர சிறப்புவிமானங்களை இயக்‍கி வருகிறது.

இதுவரை சுமார் 1,000 பேரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறாவதுமீட்பு விமானம் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் இன்று திங்கள்கிழமை புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியபடைகளின் தாக்குதலால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று திங்கள்கிழமை இரண்டாவது உயா்நிலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் கலந்துகொண்டாா். கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை விரைந்துமீட்கும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணிகளை ஒருங்கிணைபதற்காக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் உக்‍ரைனின் அண்டைநாடுகளுக்‍கு இந்தியாவின் சிறப்பு தூதரர்களாக சென்றுகண்காணிக்க உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டுள்ளது. விரைவில் மாணவர்கள் ரயில் நிலையங்களை நோக்கிச்சென்று நாட்டின் மேற்குப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இந்தியதூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ரஷியாவின் படையெடுப்பின்போது கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்தனர்.

உக்ரைன் தனது வான்வெளிபாதையை மூடுவதற்கு முன்பு ஒருசிலர் மட்டுமே வெளியேற முடிந்தது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சுமார் 16,000 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது, அவர்கள் விடுதியின் அடித்தளங்கள் மற்றும் வெடிகுண்டுமுகாம்களில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷியா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
ஆகியோருடன் தனித்தனியாக பேச்சு நடத்தி பிரதமர் மோடி, அவர்களிடம் போர் பதற்றத்தைத் தணிக்கும்படி வலியுறுத்தியதுடன், உக்ரைனில் இருந்து இந்தியமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...