மோடி காலம் தந்த தலைவன்

உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கின்றது அதற்கு காரணம் மோடி எனும் மிகசிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு ஆம், எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுகுமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு சாத்துவது சீன வழமை இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார் அதனில் யார் அடித்தாலும் கேட்க ஆளிலலா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் மிஸ்டர் நேரு.

இதனால்தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா
அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி
1971லும் இதுவேதான் நடந்தது, இரும்புபெண் இந்திராவும் காஷ்மீரை தொட அஞ்சினார் அதுவும் பாகிஸ்தான் முழங்கால் போட்டு அதன் இன்னொரு கால் உடைந்த நிலையிலும் அஞ்சினார.

உலக நிலைப்பாட்டின்படி ஒரு வளரும் நாட்டுக்கு ஒரு முகாம் அவசியம், அது நேட்டோ என ஐரோப்பாவில் உண்டு, அரபு கூட்டணி என அங்கே உண்டு ஆப்ரிக்காவுக்கு கூட சில அமைப்பு உண்டு. ஆனால் நேருவின் குழப்பமான கொள்கையால் இந்தியா தனியே அடிவாங்கியது, இந்தியா அடிவாங்குவதை விட நேரு கொள்கையினை மாற்றுவது நல்லதல்ல அதனால் வாங்கட்டும் என காங்கிரஸ் தலமைகளும் அப்படியே வைத்திருந்தன‌
ரஷ்யாவும் சீனாவினை காட்டி இந்தியாவுக்கு ஆயுதம் விற்கும் அதே ஆயுதத்தை சீனாவுக்கும் கொடுத்து ரசிக்கும்.

ஒரு வியாபார சந்தையாக இந்தியாவினை ரஷ்யா கட்டுபடுத்திற்று அதை தாண்டி இந்தியாவுக்கு எந்த நல்லதையும் அந்நாடு செய்ததில்லை குறிப்பாக சீனாவுக்கு ஆதரவாக அதன் நிலைப்பாடு இருந்தது இருக்க்கின்றது. இந்நிலையில்தான் மோடி இந்தியாவினை துணிந்து அமெரிக்க முகாமுக்கு மாற்றினார் அதுவும் தந்திரமாக‌ சீனாவினை எதிர்க்கும் அணியில் இந்தியா ஒரு நாடு என சேர்ந்து கொண்டார்

இப்‍பொழுது குவாட் அமைப்பு, பிரான்ஸுடன் கூட்டணி என சீனாவினை நோக்கி வலுவாக நிற்கின்றது இந்தியா இப்பொழுது சீனாவோடு யுத்தம் வந்தால் அது 1962 போல தனிமையில் இந்தியாவினை தள்ளாது, உலகம் இந்தியா பக்கம் திரளும்
உண்மையில் இப்பொழுது கடும் வருத்தத்தில் இருப்பவர் சீன ஜனாதிபதி ஜின்பெங் என்பவர்தான்

நிச்சயம் இந்தியாவின் மேல் தாக்குதல் தொடுக்க இதுதான் உகந்த நேரம், இந்தியாவினை சீண்டாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியா தனித்தே இருந்திருக்கும் இப்பொழுது சீனாவுக்கு நிலை சாதகமாயிருக்கும்

ஆனால் பழைய காங்கிரஸ் அரசுகளை போல நினைத்து கொண்டு மோடியினை சீண்டினார், மோடி அரசு கல்வான் பாங்காக் சோ என திருப்பி அடித்து இந்தியா அமெரிக்க அணி என அறிவித்து கடும் பதிலடி காட்டியது

சீனா இதனை எதிர்பார்க்கவில்லை மேற்கொண்டு ரஷ்ய ஆயுதத்தை குறைத்து அமெரிக்கா பிரான்ஸ் இஸ்ரேல் என பலத்தை இவ்வழியில் பெருக்கிற்று இது ரஷ்யாவுக்கும் அதிர்ச்சி
ஆக 2020ல் சீனா செய்த அவசர காரியத்தால் இந்தியா வலுவான பாதுகாப்பு நிலைக்கு சென்றாயிற்று.

இப்பொழுது சீனா பல்லைகடித்து கொண்டிருக்கின்றது, இந்தியாமேல் கைவைக்க இது தோதான நேரம் இனி இப்படி ஒரு வாய்ப்பு வராது என அவர்கள் கை அரிப்பெடுத்தாலும் அவசரபட்டு இந்தியாவினை பலமாக்கிவிட்டோமே, மோடி என்பவர் இப்படி அடிப்பார் என நினைக்கவில்லையே என வாயில் துண்டு வைத்து அழுது கொண்டிருகின்றது அந்நாடு
மோடி காலம் தந்த தலைவன், அந்த தலைவன் மிக சரியான நேரத்தில் சரியான ஏற்பாடுகளை செய்து தேசத்தை வலுவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்
நம்புகின்றீர்களோ இல்லையோ இன்று மோடி என்பவர் அல்லாமல் காங்கிரஸ் அரசோ இல்லை குழப்பமான “சமூக நீதி அரசு “மதசார்பற்ற அரசு” இருந்திருந்தால் இந்நேரம் சீன ஏவுகனைகள் டெல்லியினை மிரட்டியிருக்கும் சீன ராணுவம் அருணாசலபிரதேசம் முழுக்க புகுந்திருக்கும், அணிசேரா இந்தியா அடிவாங்க ஆரம்பித்திருக்கும்.

அப்படியே ரஷ்யாவினை தாக்கிவிட்டு எம்பக்கம் வாருங்கள் இது எங்கள் நியாயம் என உலகநாடுகளையும் மிக எளிதாக சமாளித்திருக்கும் தேசம் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கும். மோடி எவ்வளவு பெரும் ஆபத்திலிருந்து தேசத்தை காத்தார் என்பதை இத்தருணத்தில்தான் புரிந்து கொள்ளமுடியும்.

நன்றி ஸ்டாண்லி ராஜன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...