உபியில் பாஜகவின் வெற்றி என்பது சாதரணமாக கொண்டாடியோ அல்லது வெறுத்தோ கடக்கிற விஷயமல்ல. ஹிந்துக்களின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, தேசத்தின்பாதுகாப்பு, வளர்ச்சி என எல்லாவற்றையும் உள்ளடக்கிய, பல நூற்றாண்டுகள் பேசப்படப்போகும் வரலாற்றுச் சந்தி.
2014 நாடாளுமன்றம், 2017 உ.பி சட்டமன்றம், 2019 நாடாளுமன்ற வெற்றியை விட மிக முக்கியமானது 2022 உ.பி சட்டமன்ற வெற்றி. காரணம், உத்தரபிரதேசம் ஜாதிகளாலும், மதத்தாலும் பிளவுபட்டு கிடக்கும் பழம்பெரும் மாநிலம். இந்தியாவின் ஹிருதயம், சகதிக்குள் அமிழ்ந்து கிடந்ததுபோன்ற நிலைதான் இருந்தது.
எப்போதுமே நான் சொல்வதுதான் “ராமஜென்ம பூமி – மண்டல் – தாராளமயமாக்கல்” இந்த முக்கூட்டுதான் நவீன இந்தியாவின் அரசியலை ஆதிக்கம் செலுத்துகிறது. இது மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது.இதை அங்கே ஒருமடாதிபதியை முன்னிறுத்தி, பொருளாதார வளர்ச்சி – சமூக நீதி அரசியலை இந்துத்துவ குடையின் கீழ் கொண்டுவந்து வாக்குகளாக மாற்றமுடியும்; அதோடு நிலைத்த ஆட்சியை தரமுடியும் என்பதெல்லாம், எளிமையான விஷயமல்ல.
பிரபு ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த நிகழ்வைப்போல, ஒவ்வொரு ஹிந்துக்களின், இந்தியர்களின் மனநிலையும் இருக்கவேண்டிய வெற்றி இது. இந்த வெற்றி தான் நாளைய பாரதத்தை பலமடங்கு வலிமையானதாகவும், அதனுடைய அரசியல் ஓட்டத்தின் தெளிவையும் விரிவுபடுத்தப் போகிறது..
“வளர்ச்சி – கலாச்சார பெருமை – பாதுகாப்பு” இதற்கு கிடைத்தவெற்றியை, தர்மத்தின் கண்கொண்டு பார்க்க தெரியாதவர்கள் எதிர்கால களத்தில் கௌரவ சேனை போல வீழ்ந்தழிவார்கள்..
– சுந்தரராஜ சோழன் –
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |