முத்து ராமலிங்க தேவரோடு தான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்.

சென்னையில் பேட்டியளித்த அவர், “இந்தி மொழி யாரும் ஆதரிப்பதால் வளர்ப் போவதில்லை. முதலில் தமிழை காப்பாற்றுவோம். இந்தியை தடுபதிலேயே குறியாக இருக்காதீர்கள்.

தமிழ் எவ்வளவு அழித்துவருகிறது தெரியுமா? சுற்றி பார்த்துவிட்டு சொல்லுங்கள் எத்தனை போர்டுகளில் தமிழ்இருக்கிறது என்றும்? எல்லாவற்றிலும் ஆங்கிலம்தான். போர்டில் இந்தி இருந்தால் தாரைவைத்து அழிக்கிறார்கள். அங்கு தமிழ் இல்லை என்று யாராவது கவலைப் படுகிறார்களா?

தமிழ் இல்லாத இடத்தில் எழுதுங்கள். இன்னொரு மொழியைஅழிக்காதீர்கள். சாக கிடக்கும் நமது குழந்தைக்கு சோறு கொடுப்பீர்களா? அல்லது மற்றவரின் சோற்றில் உப்பில்லை என்பீர்களா? தமிழ் நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ்பாடமே இல்லை. இன்று வளரும் மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியவில்லை. படிக்க தெரியவில்லை. இதைகேட்க இங்கு யாரும் இல்லை.

இந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். நம் தாய் மொழி தமிழை தக்க வைக்கவேண்டும் தானே? அதை யார் இங்கு செய்கிறார்கள். அதுகுறித்து யாருக்கும் கவலையில்லை. எல்லாமே அரசியல்தான். தமிழ்பற்று வேண்டும். ஆனால், தமிழை அரசியலாக்கக் கூடாது. இங்கு பலபேர் தமிழை அரசியலாக்குகின்றனரே தவிர யாரும் தமிழ் பற்றோடு குரல் கொடுக்க வில்லை.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக்குங்கள். பல பள்ளிகளில் தமிழ் விருப்பபாடமாக மட்டுமே உள்ளது. இதற்காக இங்கு யார் குரல் கொடுக்கிறார்கள். தமிழ்மொழி என்ன விருந்தாளியா? தமிழை வாழ வைப்பவர்தான் தமிழன். இந்தியை ஒதுக்கினால் தமிழன் என்று சொல்வ தெல்லாம் வேஸ்ட். மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இளையராஜா அம்பேத்கரை ஒப்பிட்டது அவருடைய விருப்பம். அது அவரதுகருத்து. இதில் சாதியை கொண்டு வருகிறார்கள். பெரியார் இல்லை என்றால் இசையமைத்து இருப்பீர்களா என கேட்கிறார்கள். அவருக்குமுன் எத்தனையோ கவிஞர்கள் இருந்துள்ளார்கள். அவர்களையெல்லாம் பெரியாரா வளர்த்து விட்டார். இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தமானவர்.

கருத்துசொல்வது அவரது உரிமை. இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார். என்னை பொறுத்தவரை இன்னொருவரோடும் ஒப்பிட்டு இருக்கவேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரோடு. அவர்தான் தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என்று சொன்னார். மோடியும் தேசியத்தோடும் தெய்வீகத்தோடும் இருக்கிறார். உண்மையாக முத்துராமலிங்க தேவரோடு தான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்.

தேசியத்தை நேசிப்பவரை எனக்குபிடிக்கும். நான் ஆத்திகன். நாத்திகம் பேசிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவாக பேசுபவரை பிடிக்காது. ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை என்று சொல்லிவிட்டு சிவனைஇல்லை என்று சொல்லுங்கள். அதுதான் ஆண் மகனுக்கு அழகு. அவரவர் மதத்திற்கு நம்பிக்கையாக இருங்கள். எந்தமதத்தை வழிபட்டாலும் பக்தியாக இருப்பவரை எனக்குபிடிக்கும். பக்தியாக இருந்தால் ஒழுக்கம் வரும்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...