ஔரங்கஸீப் இடித்தார் மோடி மீட்கிறார்

“ஔரங்கஸீப்,.. கோவில்களை இடித்து, “இது எங்கள் மசூதிக்கான இடம்” என்றான்.”
“இப்போ,.. மோடியின் ஆட்சியில், அந்த மசூதியைத் தோண்டி, அதில் சிவலிங்கம் இருக்கு,.. ங்கிறாங்க.!”

“இரண்டு பேருமே ஒரே வேலையைத் தானே செய்யிறாங்க டாக்டர்?”
: நடு-சென்டர்…!

“சரி, அதுபோகட்டும் விடுங்க..! உங்ககிட்ட ஒருகேள்வி கேட்கணும்,… இங்க நின்னு கடலை மிட்டாய் சாப்டுகிட்டு இருந்த உங்க பையன், எங்க?”

“அய்யயோ,.. ஆமாம்.. எங்கே என்னோட புள்ளை?… என் பையன காணுமே?”
“கவலைப் படாதீங்க… அங்க பாருங்க… கருப்பு சட்டை போட்ட ஒரு ஆளு,.. உங்க பையனை தூக்கிட்டு ஓடுறான்.!”

“ஆண்டவா.. இப்பவே, ஓடிப்போய் பிடிக்கிறேன்,..!”
“எதுக்கு?”

“என்ன டாக்டர்? பைத்தியம் மாதிரி கேள்வி கேக்கறீங்க, எதுக்கு ன்னு!”
“இல்லைங்க… அவனும், உங்க குழந்தைய உங்க கிட்ட இருந்து பிடுங்கிட்டு ஓடினான்.! நீங்களும் இப்போ அவன்கிட்ட இருந்து பிடுங்கிட்டு வரப் போகிறேன் ன்னு சொல்றீங்க.! உங்க ரெண்டு பேருக்கும் என்ன வித்யாசம்?”

“யோவ் டாக்டரே.. அந்த புள்ளை எனக்கு சொந்தமானதுயா…! அவன் செய்தது கடத்தல்,.. கொள்ளை,..! நான் செய்யிறது மீட்பு..! ரெண்டும் எப்புடியா ஒண்ணாகும்?
“என்ன சொன்னீங்க? திரும்ப ஒரு தடவை சொல்லுங்க..?”

“அது எனக்கு சொந்தமானதுய்யா,..! அவன் செய்தது கடத்தல்,.. கொள்ளை..! நான் செய்வது மீட்பு..! இது ரெண்டும் எப்புடியா ஒண்ணாகும்? நந்தி மாதிரி குறுக்க நிக்காம,.. நகருங்க டாக்டர்..!”

“ரைட்டு! போங்க, போங்க,.. போய், பையனை மீட்டு கொண்டு வாங்க..! வேணும்னா என் கார் எடுத்துட்டு வேகமா போங்க,..! இந்தாங்க சாவி!”

“நடுநிலை” மனோ-வியாதியஸ்தர்களுக்கு தெளிவாக புரியும் என்று நினைக்கிறோம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...