ரோஷம் உள்ள எந்த ஒருகாங்கிரஸ் உறுப்பினரும் திமுக கூட்டணியை விரும்பமாட்டார்

பேரறிவாளன் விடுதலை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்ப்புதெரிவித்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம்செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது கேவலம், அவமானம் என விமர்சித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகு வைக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பிஆர் கவாய், ஏஎஸ்போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்ததீர்ப்பை வழங்கியது. 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் கொலைகாரர்கள் என விமர்சனம் செய்துள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகத்தில் இன்று வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

பேரறிவாளன் விடுதலையை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ்எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜகவின் துணை தலைவரான நாராயணன் திருப்பதி காங்கிரஸ்கட்சியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கட்சி தலைவரை கொன்ற குற்றவாளியை கொஞ்சிகுலாவும் கட்சியின் தயவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைபெறுமா காங்கிரஸ்?. காங்கிரசாரே, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றவாளிகளை அரவணைக்கும் திமுகவோடு கூட்டணியை தொடர்கிறீர்களே?. இது கேவலம், அவமானம். வெட்கம், மானம், ரோஷம் உள்ள எந்த ஒருகாங்கிரஸ் உறுப்பினரும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர விரும்பமாட்டார்கள்.

மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகுவைக்கலாமா? ராஜீவ் கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் இன்னும் கூட்டணியா?. கொலை குற்றவாளியை தலையில்தூக்கி வைத்து கொண்டாடு பவர்களை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதாலும் அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்துபோய் விடும் என்பதாலும் தான் வாயில் துணியை கட்டிகொண்டு போராட்டமா?. அப்படியாவது எம்எல்ஏ, எம்பியாகிவிட வேண்டுமென்று அதிகார அரசியலுக்கு அலைவது ஏன்? நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு செய்யும்துரோகம் இது” என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...