மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி

தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்குவீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவுவங்கி அருகே நிறைவு செய்தார்.

இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, “தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாத யாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. அதுவும் கார்த்திகை தீபதிருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்புவாய்ந்தது.தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்தபணியும் முறையாக நடைபெறவில்லை. மிகமோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்துசெய்துள்ளது.

நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்த வில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ்  போட்ட ஒரேஅரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம்கோடிக்கு மேல் நிதிவழங்கி உள்ளது.ஆனால் எந்த திட்டங்களும் தஞ்சையில் முறையாக நடைபெற வில்லை. மேலும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உதான் திட்டத்தின்கீழ் தஞ்சாவூரின் விமான நிலையத்தில் இருந்து 20 இருக்கைகள் கொண்ட சிரியரக விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்பி தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் பாஜக உறுப்பினரை தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச்செய்ய மக்கள் முன்வர வேண்டும். டெல்டா பகுதியில் குறிப்பாக எங்களுக்கு சிறப்புகவனம் உள்ளது, காரணம் இந்தியா உணவு உற்பத்தி செய்யவேண்டிய நாடாகத்தான் இருக்க வேண்டும். கையேந்தகூடிய நாடாக மாறக் கூடாது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யார் அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்போகிறோம் என்று தான் போட்டி உள்ளது” என பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...