பெட்ரோல் விலை குறைப்பு இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்..!

பெட்ரோல் மீதான கலால்வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டருக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்குமீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பல்வேறுதரப்பினர் வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து மட்டுமில்லாமல் இந்தியாவின் எதிரிநாடாக பார்க்க கூடிய பாகிஸ்தானில் இருந்தும் மத்தியஅரசிற்கு கிடைத்துள்ளது.

மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கைகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பதிவில், ‘குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவின் அழுத்தங்களை பொருட் படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இதன்மூலம் அந்நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிபொருள் வழங்கமுடிகிறது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைதான் பாகிஸ்தானில் உருவாக்க தனது அரசு முயற்சிசெய்தது என்று தெரிவித்துள்ளார். தனது அரசுக்கு பாகிஸ்தானின் நலன்தான் முக்கியம் என கூறியவர், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் அந்நியசக்திக்கு அடிபணிந்து ஆட்சியை கலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். . இதனால் பாகிஸ்தானில் தற்போது தலையில்லா கோழிபோல் ஆட்சி நடைபெறுகிறது என்றும் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிசெல்வதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...