நாட்டுக்கு நன்மை என்றால் அம்பானிக்கும் செக் வைப்போம்

இந்தியாவில் பல பெட்ரோல் பங்குகளில் போதுமான எரி பொருள் இல்லாத காரணத்தால் பலபங்க்-கள் மூடப்படும் நிலை ஏற்பட்டது, அதிலும் குறிப்பாக தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்களில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனால் மக்கள் இந்தியாவிலும் இலங்கைபோன்ற நிலை வந்துவிட்டதா என்று முணுமுணுக்கத் துவங்கினர். இந்தப்பிரச்சனையைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த முடிவுதான் ஏற்றுமதி எரி பொருள் மீதான வரிவிதிப்பை அதிகரிப்பது என்பது.

மத்திய அரசின் வரிஉயர்வின் காரணமாக அரசுக்குச் சிறப்பான வருமானம் கிடைக்கஉள்ளது. அதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதியை நம்பியிருக்கும் முகேஷ்அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்படப் பல எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதிவரியை உயர்த்தியதுள்ளது. இந்திய மக்களுக்குக் குறிப்பாக ரீடைல் சந்தையில் மக்களுக்கு போதுமான எரிபொருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்மீதான வரியை அதிகரித்தது.

மத்திய நிதி யமைச்சகத்தின் வாயிலாக வெளியான அறிவிப்பின்படி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப் படும் டீசல் மீதானவரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்ந்துள்ளது, பெட்ரோல் மீதான ஏற்றுமதிவரி லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது, விமான எரிபொருள் மீதான ஏற்றுமதிவரி லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்தவரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்தியஅரசுக்கு எரிபொருள் ஏற்றுமதி தற்போது இருக்கும் அளவு தொடர்ந்தால் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும், அதாவது நடப்புஆண்டில் சுமார் 94,800 கோடி ரூபாய் கிடைக்கும் என மூடிஸ் இன்வெஸ் ட்டார்ஸ் சர்வீசஸ் கணித்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் அன்னியசெலாவணி இருப்பு என்பது வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் அளவிற்குப் போதுமானதாக உள்ளது, மேலும் கூடுதல்வருமானம் என்பது மத்திய அரசு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியில் அறிவித்த குறைப்பு மூலம் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ஏற்றுமதிவரி மற்றும் செஸ்உயர்வு உள்நாட்டு எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஆனால் இதே வேளையில் எரிபொருள் ஏற்றுமதியை முக்கிய வர்த்தகமாக கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு பெரும்பாதிப்பாக உள்ளது.

இப்புதிய ஏற்றுமதிவரி உயர்வால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை பாதிக்கும், இதனால் காலாண்டு முடிவுகளில் பாதிப்பு ஏற்பட்டு இந்நிறுவன பங்குகள் அதிகளவில் சரியக்கூடும். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வரி உயர்த்தப்பட்ட ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.