இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை இந்தியமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்றழைக்கப்படும் விடுதலை அமிர்தப்பெருவிழா என்பது 75 ஆண்டுகால சுதந்திரம் மற்றும் அதன்மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.
மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதே இந்தமுயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இல்லம் தோறும் மூவண்ணக் கொடி ஏற்றும் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பலர் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமானபதிலில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்தஇயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனைப் பங்கேற்பைப் பார்க்கிறோம்.
விடுதலை அமிர்தப் பெருவிழாவை குறிக்க இது ஒருசிறந்த வழியாகும். மூவண்ணக் கொடியுடன் உங்கள் புகைப்படத்தையும் hargartiranga.com என்ற இணையதளத்தில் பகிரவும்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |