திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.தமிழ்நாாட்டில் சென்னை- மைசூரு, சென்னை – கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை – மைசூரு இடையே ஜோலார்பேட்டை பெங்களூருவழியாக செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார்.
இந்தநிலையில், சென்னை – திருநெல்வேலி இடையே வந்தேபாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இந்த ரயில் யக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். வந்தே பாரத் ரயிலில் ஏசிசேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகள் உள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும்.
ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாாகி உள்ளன.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |