உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கு பிப்.,5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் சந்திரபானு பஸ்வான், சமாஜ்வாதி சார்பில், அஜித் பிரசாத் உட்பட 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஆனால் அனைவரது கவனமும், பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் மீது தான் இருந்தது. இந்த தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணி துவங்கி நடந்து வருகிறது.
மொத்தம் 30 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. முதல் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளர் 7 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
முதல் இடத்தில் இருக்கும் பா.ஜ., வேட்பாளர், 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளரை விட 10,123 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்த தொகுதி, அயோத்தி பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டதாகும். அயோத்தி பார்லிமென்ட் தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதிவேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவரது மகனைத் தான் இந்த தேர்தலில் சமாஜ்வாதி களம் இறக்கியது.
கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த இடைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |