அறிவாலயம் திமுக அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. கமிஷனுக்கான அரசு, தரமற்ற அரசு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.
ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பரிசை தருவதாக தமிழகஅரசு தெரிவித்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்ததோ, தரங்கெட்ட பொருட்கள். பல இடங்களில் மக்கள் அதை வாங்க மறுத்தனர். வாங்கிய சிலர் குப்பைகளில் வீசும் அளவிற்கு மோசமான பொருட்களை தமிழக அரசு வழங்கியது. ஆனால் அந்த பழியினை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது சுமத்தி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம், அவர்களை பிளாக் லிஸ்ட் செய்வோம், என்றெல்லாம் அறிக்கை தயாரித்தனர்.
தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில், ரூ1000 மதிப்புள்ள பரிசில், ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான் இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம்.
அப்படி, தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் பிளாக் லிஸ்ட் தடைசெய்யவில்லை.
அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கு 2.5 கோடி அபராதம் மட்டும் போதும் என்ற முடிவை யார் எடுத்தது?
தரமற்ற பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏன்?
தவறு செய்தவர்களுக்கு தண்டனைக்கு பதில் வெகுமதிகள் தருவது தான் திராவிட மாடலா? தீவிரமாக திருடுவதும், திருட அனுமதிப்பதும்தான் திராவிட மாடல் போல… இந்த ஊழல் வெளிச்சம் தான்… அவர்கள் சொன்ன விடியலோ?
தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்டனை தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது.
என்றும் தேசப் பணியில்
(K.அண்ணாமலை)
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |