உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகைநடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மாநிலத்தின் சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், ” உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் வன்முறை இல்லை. உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மற்றும் அல்விதா ஜும்ஆ (ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை) அன்று சாலையில்நமாஸ் நடத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் முசாபர்நகர், மீரட், மொராதாபாத் மற்றும் பலஇடங்களில் கலவரங்கள் நடந்தன. மாதக்கணக்கில் ஊரடங்குச்சட்டம் இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கலவரம்கூட நடக்கவில்லை.
“எங்கள் அரசு மாநிலத்தில் உள்ள சட்ட விரோத இறைச்சிக்கூடங்களை மூடியுள்ளது. மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கிய மாகவும் இருக்க கோசாலைகளை கட்டியுள்ளோம். மதஸ்தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகளையும் அகற்றியுள்ளோம். எங்கள் அரசாங்கம் 700 க்கும் மேற்பட்ட மதஇடங்களை புனரமைத்துள்ளது” என்று கூறினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |