ஹைட்ரஜன் மூலம் பசுமைஎரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி: ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர் காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய மையமாக இந்தியாஇருக்கும். ஹைட்ரஜன் மூலம் மாசு உண்டாக்காத எரிபொருள் உருவாக்கமுடியும்.
உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கத் தொகைகள் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். இந்த பணியை செயல்படுத்த, அரசு 19, 744 கோடி ரூபாய் ஓதுக்கீடுசெய்துள்ளது.
பிரசார்பாரதியின் ஒளிபரப்பு உள்கட்டமைப்பின் குடிமைப் பணிகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் நிதியுதவி அளிக்க ரூ.2,539.61 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்மேம்பாடு திட்டத்திற்கு இது பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |