இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம்

” இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கயானா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியா எப்போதும் எல்லையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியது கிடையாது. இயற்கை வளங்களை பிடிப்பது என்ற கொள்கையில் இருந்து எப்போதும் விலகியே இருந்துள்ளோம். விண்வெளி அல்லது கடல் என எதுவாக இருந்தாலும், அது சர்வதேச ஒத்துழைப்புக்கானதாக இருக்க வேண்டும். சர்வதேச மோதலாக கூடாது என்பது எனது நம்பிக்கை .உலகளவில் தற்போது மோதலுக்கான நேரம் அல்ல. மோதலை உருவாக்குவதற்கான நிலைகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம் இது.

‘முதலில் ஜனநாயகம்’, ‘முதலில் மனிதநேயம்’ என்பதே முன்னேறுவதற்கான ஒரே வழி. முதலில் ஜனநாயகம் என்பது, அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரின் வளர்ச்சி என்பதுடன் முன்னேறி செல்ல கற்றுக் கொடுக்கிறது.

‘முதலில் மனிதநேயம்’ என்பது நமது முடிவுக்கான திசையை தீர்மானிக்கிறது. இதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் மனிதநேயத்தின் நலனுக்கானதாக இருக்கும்.

அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு மட்டுமல்ல என்பதை இரு நாடுகளும் காட்டி உள்ளோம். நமது டிஎன்ஏ, பார்வை மற்றும் செயல்பாட்டில் ஜனநாயகம் உள்ளது என்பதை இரு நாடுகளும் ஒன்றாக காட்டி உள்ளன. 200- 250 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும், கயானாவும் ஒரே மாதிரியான போராட்டத்தை சந்தித்தன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...