மருத்துவ சேவைகளுக்கான உபகரண ங்களை உற்பத்திசெய்வது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையின் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல்

இறக்குமதி சுமையை குறைப் பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண ங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக மத்திய அரசு முனைப்புடன் செயல் படுகிறது என்று மத்திய சுகாதார மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். உள்நாட்டிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகளுக்கான உபகரண ங்களை உற்பத்திசெய்வது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையின் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல் ஆகும்.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க 55 விண்ணப் பங்கள் வந்துள்ளது. இதில் 20 குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 2022-2023 நிதியாண்டில் சுமார் ரூ.2200 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகை திட்டம் தொடர்பாக அதிகளவில் மருந்து பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குப வர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சுமார் 1900 பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. புற்று நோய் பாது காப்பு சம்மந்தமாக ரேடியோ தெரபி மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகள் மேற்கொள்ள படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...