பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” பாதயாத் திரையை கடந்த 29ஆம் தேதி ராமநாத புரத்தில் தொடங்கினார். இன்று புதுக் கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி பகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர், திறந்தவேனில் நின்று பேசினார். அப்போது, திமுகவினரின் ஊழல்குறித்த மூன்றாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஊழல்புகார்கள் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு பெரியார் மண்ணா என்பது பாதயாத்திரை முடியும் போது தெரிந்துவிடும் எனக்கூறிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் எந்தகட்சி தங்கள் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்காக பாடுபட்டவர் என்றும், அவரை கூட்டணியில் இருந்து ஒதுக்க வில்லை என்றும் தெரிவித்தார். கோட நாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தாம்சொல்ல ஒன்றும் இல்லை என்றும், அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |