அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது

இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். இதை நிறைவேற்றுவதற்காக, அடுத்த ஐந்துஆண்டுகளில் செய்யப்போகும் செயல் திட்டங்களை அவர் கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது, ராஜ்யசபாவில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்வர இருக்கும் தேர்தலில் ஜெயித்து மீண்டும் பிரதமராகி, அடுத்த ஐந்துஆண்டுகளில் செய்யப்போகும் அதிரடியான செயல் திட்டங்களை கோடிட்டு காட்டினார் மோடி.

மோடி 3.0 என்று இப்போதே பேசத்துவங்கிவிட்டனர். மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி, இந்தியாவை வளர்ந்தநாடாக்க முழு முனைப்புடன் செயல்படும். வளர்ந்தபாரதம் என்பது வெறும் கோஷமல்ல, அது என் உத்தரவாதம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம்.கிசான், இலவச காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான்பாரத், அனைவருக்கும் சொந்தவீடு வழங்கும் பி.எம். ஆவாஸ் யோஜனா, இலவச ரேஷன், குறைந்த விலையில் மருந்து போன்றவை தொடரும்.

மருத்துவ சிகிச்சை கட்டணங்கள் குறைக்க ப்படும். குழாய் வாயிலாக சமையல்காஸ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு தரப்படும். சூரியமின்சக்தி கிடைக்கும் என்பதால், மின்கட்டணம் செலுத்த அவசியமில்லாத நிலை உருவாக்கப்படும். ஒருலட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும். காப்புரிமை பெறுவதில் சாதனை படைக்கப்படும்.

மிகச் சிறந்த பல்கலைகள், சர்வதேச விளையாட்டு களில் பங்கேற்பு, பொது போக்குவரத்தில் மறுமலர்ச்சி, புல்லட்ரயில் என, பலவசதிகள், திட்டங்கள் செயல்படுத்துவோம். செயற்கை நுண்ணறிவு விரிவாக பயன் படுத்தப்படும். பசுமை தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், மாசில்லா எரிசக்தி என, பலவற்றையும் இந்நாடு சந்திக்க உள்ளது.

காங்கிரஸ் மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதனால்தான், லோக்சபாவில் அதன்பலம் தொடர்ந்து குறைந்துவருகிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரானது காங்கிரஸ். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்காது. அதுபோல, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் எதிரானது காங்கிரஸ்.

நேரு பிரதமராக இருந்தபோது, மாநில முதல்வர்களுக்கு ஒருகடிதம் எழுதினார். இடஒதுக்கீடு குறிப்பாக வேலைவாய்ப்புகளில் அளிப்பதால், அரசு நிர்வாகம் பாதிக்கப்படுவதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். தங்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் பாரத ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கரை புறக்கணித்தது. ஆனால், தற்போது எங்களுக்கு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பாடம் எடுக்கின்றனர்.

மாநில அரசுகளை கலைத்து ஜனநாயகத்தின் குரலை நசுக்கியவர்கள், பத்திரிகைகளின் குரல்வளையை நெரித்தவர்கள், தற்போது நாட்டைதுண்டாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டை பிடித்திருந்த பலபிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களுடைய இரண்டு ஆட்சிகாலத்தில் அவற்றை தீர்த்து வைத்தோம்.

காங்கிரசின் சிந்தனை செயல்திறன், பழதாகி, உதவாத நிலைக்கு சென்றுவிட்டது. தங்களுடைய சொந்தத் தலைவர்கள் மற்றும் கொள்கைகளுக்கே உறுதிஅளிக்க முடியாத இவர்கள், மோடியின் உறுதிமொழிகள் குறித்துகேள்வி எழுப்புகின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் வகையில், வடக்கு, தெற்கு என்று பிரித்து பேசுகின்றனர்.

எங்களுடைய வரி, எங்களுடைய பணம் என்று பேசுகின்றனர். ஒரு உடலில் அனைத்து உறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக செயல்படவேண்டும். இந்தியா என்பது பல அங்கங்கள் இணைந்த உடல். அதை பிரித்து பார்க்கக்கூடாது. அரசியலுக்காக அவர்கள் பேசும் பேச்சு வலியை ஏற்படுத்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கம் காங்கிரசில் தற்போதும் உள்ளது. அதனால்தான், அவர்கள் விட்டுச் சென்ற அடிமைத்தனம், பிரிவினைவாத கொள்கையை காங்கிரஸ் தொடர்கிறது.

வரும் தேர்தலில், காங்கிரசுக்கு 40 இடங்கள்கூட கிடைக்காது என்று மேற்கு வங்கத்தில் இருந்து குரல் எழுந்துள்ளது. குறைந்தபட்சம் அந்த இடங்களையாவது காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ள கடவுளை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...