” ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது பற்றி, கேட்டகேள்விக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என எனது நண்பரான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிவிட்டார். இதுதான் ஒரு தேசத்தின் கவுரவம்” என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பாராட்டி உள்ளார்.
ஐ.நா.வில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சாஎண்ணெய் வாங்குகிறோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்டவேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. உங்கள் வேலையை மட்டும்பாருங்கள்” என ஜெய்சங்கர் பதில்அளித்தார்.
இதுகுறித்து, ரஷ்யாவில் உலக இளைஞர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேசியதாவது: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதுபற்றி, என் நண்பரான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரிடம், ஐ.நா., விவாதத்தில் மேற்கத்திய நாட்டினர் கேட்டனர்.
அதற்கு அவர், ‘நீங்கள் எவ்வளவு கச்சாஎண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து வாங்கினீர்கள், வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும். எனவே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்’ என்று கூறி விட்டார். இது தான் ஒரு தேசத்தின் கவுரவம். இவ்வாறு அவர் பேசினார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |