பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்

“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டுபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்தியஅரசு திட்டவட்டமாக மறுத்தது.

இதனால், இந்தியா – கனடா உறவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

கனடா அரசுடன் சிலஆண்டுகளாக தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுவருகிறது. பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பாகவே இந்தபிரச்னைகள் சுழல்கின்றன.

இந்தியா ஓர் ஜனநாயக நாடு. பேச்சுசுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கருத்து சுதந்திரம் வன்முறையை துாண்டும் விதமாக இருக்கக்கூடாது. பேச்சு சுதந்திரத்தை, வன்முறை தவறாக வழி நடத்துகிறது. கனடாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இந்திய துாதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. கனடாவின் குற்றச்சாட்டை நாங்கள் கண்டுகொள்ளாமல் இல்லை.

எதையும் பார்க்க மாட்டோம் என்று கதவுகளை மூடிக் கொண்டும் இல்லை. நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை கனடா பேசி தீர்க்கவேண்டும்.

கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடாபகிர்ந்தால், அதை விசாரிக்க தயார். எதிர் தரப்பில் என்று ஆதாரமாகக் காட்ட தெளிவாக ஏதேனும் இருந்தால் அதை நாங்கள் பரிசீலிக்கதயாராகவே இருக்கிறோம்.

அதேபோல், இந்தியா சார்பில் சில தனிநபர்களை நாடு கடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவற்றை கனடா கண்டுகொள்ளவே இல்லை. அந்தநபர்கள், அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான வன்முறையைத் துாண்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்பது தெரிந்ததுமே, அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு நடந்தது போல், வேறு எந்த நாட்டுக்காவது நடந்திருந்தால், அதை அவர்கள் எப்படி கையாண்டிருப்பர் என்ற கேள்வியும் எழுகிறது.

கனடாவில் உள்ள துாதரகம் மற்றும் துணைதுாதரகம் செல்லும் இந்திய துாதர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர். இதனால், அங்கு விசாநடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கனடா பிரச்னை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சல்லிவன் ஆகியோருடன் பேசியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...