பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோருக்கு, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா புதுதில்லியில் நேற்று (05.07.2024) நடைபெற்றது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
ஆயுதப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
10 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும், 26 பேருக்கு சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகளும், ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
வெல்லமுடியாத துணிச்சல், கடமையில் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |