7-வது அனுபவ் விருதுகள் நாளை டெல்லியில் வழங்கப்படும்

பிரதமரின் உத்தரவின் பேரில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) மார்ச் 2015-ல் ‘அனுபவ்’ என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது.

இது ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் பணிக் காலத்தில் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். இதுவரை 54 அனுபவ் விருதுகளும், 9 நடுவர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) 2016-ல் தொடங்கப்பட்டதிலிருந்து  7-வது அனுபவ் விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. அனுபவ் விருதுகள் மற்றும் நடுவர் சான்றிதழ்களை பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஆகஸ்ட் 28 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் 7-வது அனுபவ் விருதுகள் விழாவில் வழங்குவார்.

2024-ம் ஆண்டில், அனுபவ் விருது பெற்றவர்கள் மற்றும் நடுவர் சான்றிதழ் பெற்றவர்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர் (i) நிர்வாகப் பணி, (ii) நல்லாட்சி, (iii) ஆராய்ச்சி, (iv) நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், (v) கணக்குகள், (vi) பணியை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான கருத்து அல்லது ஆலோசனை.

இந்த விருது வழங்கும் விழா தனித்துவமானது, ஏனெனில் 15 விருது பெற்றவர்களில், 33% சதவீதத்தினர் பெண்கள் ஆவர், இது 2015-ல்  தொடங்கிய ‘அனுபவ்’ வரலாற்றில் மிக உயர்ந்ததாகும், இது நிர்வாகத்தில் அவர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிக்கிறது.

அனுபவ் விருது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது: (i) பதக்கம் (ii) சான்றிதழ் (iii) ஊக்கத்தொகை ரூ.10,000/-, அனுபவ் நடுவர் சான்றிதழ், (i) பதக்கம் (ii) சான்றிதழ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...