பழுது பார்க்கும் உரிமை குறித்த தளம் குறித்த ஆலோசனை

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை வாகனங்ளைப் பழுதுபார்க்கும் நடைமுறைகளை எளிதில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழுதுபார்ப்பதற்கான உரிமை ( https://righttorepairindia.gov.in/ ) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுகர்வோரின் உரிமைகளை நிலைநிறுத்தவும், சிக்கல் இல்லாமல் வாகனப்பழுதுபார்ப்பை மேற்கொள்ளும் வகையிலும் இந்த தளம் அறமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வாகன நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் வாகன தொழில்துறை சங்கங்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன.  இந்த நிறுவனங்கள் இந்த தளத்தில் இணைய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

பழுது பார்ப்பு தொடர்பாக அனைவரும் அணுகக்கூடிய பழுதுபார்ப்பு கையேடுகள் மற்றும் வீடியோக்களை  அதிகம் வெளியிட வேண்டியதன் அவசியத்தை செயலாளர் திருமதி கரே வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் பழுது பார்ப்பு சேவைகளை வழங்குதல்,  எளிதில் பழுதுபார்க்கும் சூழலை ஏற்படுத்துதல், உதிரி பாகங்கள் உரிய முறையில் கிடைப்பது, சுய பழுதுபார்ப்பு குறித்த விரிவான கையேடுகளை வெளியிடுதல் போன்றவை அவசியம் என்று அவர் வலியுறுததினார்.

இந்தக் கூட்டத்தில் ஏசிஎம்ஏ, எஸ்ஐஏஎம் போன்ற வாகனத் தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, ரெனால்ட்ஸ், போஷ், யமஹா மோட்டார்ஸ் இந்தியா, ஹோணடா கார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...