சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்

2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-வின்  முதல் 15 நாட்களிலேயே, மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. “நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் கீழ் ஐதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 12.10.2024 அன்று தொடங்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, எரிசக்திக்காக  வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுரங்க அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான, நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், 1.6 டன் அலுமினியக் கழிவுகளைப் பயன்படுத்தி, வியப்பூட்டும்  சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்தக் கலைப்படைப்பு தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 6-ல் உள்ள ராணி லட்சுமிபாய் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தூய்மை உணர்வை ஊக்குவிக்கும் முயற்சியாக, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்,  புவி பாரம்பரிய மற்றும் புவி சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காண்பதிலும், சுரங்க அமைச்சகம், பொது மக்களின் 80% கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.