2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற மோடி அரசின் உறுதிபாட்டை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
தொலைநோக்குப்பார்வை கொண்ட இந்த பட்ஜெட்டுக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட், மகளிர் சக்தியின் துணிச்சலுக்கும், வலிமைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறை உற்பத்திக்கு ஊக்கமளிக்க 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, புதிய நல்வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தேசிய கூட்டுறவு கொள்கை, கூட்டுறவு இயக்கத்திற்கு அதிகாரமளித்து, அதன் வலிமையை கடைக்கோடி அளவிற்கு சென்றடையச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் ஒதுக்கீடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு புதிய சக்தியை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |