கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல்மயமாக்கம்

கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி மதிப்பீட்டில்  கணினி மயமாக்கப்படவிருப்பதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த்த் திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படுவதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை ரூ.794 கோடி பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குவதன் வாயிலாக கூட்டுறவு கடன் அமைப்புகளை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும்  திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளர். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வன்பொருள் வாங்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசின் பங்காக ரூ.4.26 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற தனி அமைப்பு  ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், எந்தவொரு கிளையிலும் பரிமாற்றம் செய்யத்தக்க கோர் பேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...