போலந்து குடியரசு உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கு இன்று நான் அரசு முறைப் பயணத்தை தொடங்குகிறேன்.

போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.

போலந்திலிருந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு நான் பயணம் செய்ய இருக்கிறேன். உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீர்வு காண கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில் இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த இரு நாடுகளுடனான விரிவான தொடர்புகளின் இயற்கையான தொடர்ச்சிக்கும் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவான, துடிப்புமிக்க உறவுகளுக்கு அடித்தளத்தை அமைக்கவும் இந்தப் பயணம் உதவும் என்று நான் நம்புகிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...