பெண்களின் வருமானத்தை லட்சமாக உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம்

பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்தியஅரசு தொடங்கிய திட்டம்தான் லக்பதி தீதிதிட்டம். இந்த திட்டத்தில் சேரும் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்கிடைக்கும். அத்துடன் சுய தொழில் பயிற்சி அரசு சார்பிலேயே கொடுக்கப்படும். சிறப்பாக செயல் படும் பெண்களுக்கு அரசுசார்பில் சிறப்பு ஊக்கம் கொடுக்கப்படுவதுடன், புதியதொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். எந்ததொழில் வாய்ப்பும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இந்ததிட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது? என்னென்ன தொழில்பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும்பெண்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும்நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம்தான் லக்பதி தீதி திட்டம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்ததிட்டத்தில் கடன் உதவித்தொகை, தொழில் பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. பெண்கள் ஒருகுழுவாக இயங்கி இந்ததிட்டத்தின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டமுடியும். ஒரே கண்டிஷன் என்னவென்றால் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள்தான் இந்த திட்டத்தின் பயனாளிகள். அவர்கள் மட்டுமே லக்பதி தீதிதிட்டத்தில் சேர முடியும்.

லக்பதிதீதி திட்டத்தில் பிளம்மிங் வேலை, எல்இடி பல்பு உற்பத்தி, டிரோன் பயிற்சி மற்றும் பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று பயிற்சிகள் மட்டுமல்லாது கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படும். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை தொடர்புகொண்டால் இந்ததிட்டம் குறித்த தெளிவான விளக்கம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

லக்பதி திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வருமான வரிச்சான்றிதழ், பான்கார்டு ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். நீங்கள் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழு விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

லக்பதி தீதி திட்டத்தில் சேர தகுதி

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பெண் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அரசுவேலையில் இருக்ககூடாது. ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது?

லக்பதி தீதி திட்டத்தில் சேருவதற்கு அருகில்உள்ள அங்கன்வாடி மையத்துக்கு செல்லுங்கள். இந்ததிட்டத்திற்கு தேவையான ஆவணங்களான இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்லவும். அங்கு திட்டத்தைப்பற்றி விரிவான தகவல்கள் வழங்கப்படும். தொழிற்பயிற்சி, மானியம், கடன் உதவி, வட்டியில்லா கடன் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு திட்டத்தில் சேருபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, லக்பதி தீதி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் சேர்ந்து லட்சாதி பதியாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விரைவில் இந்ததிட்ட பயனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், அறிவிப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...