சட்ட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க , பைல்ஸ்-3 வெளியிடப்படும் -அண்ணாமலை

 ‘சட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க., பைல்ஸ்-3 வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக வரும் டிச., 12ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தமிழகம் வருவோம். விவசாயிகளுக்கு சாதகமான தகவலுடன் வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தி.மு.க,., பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டுள்ளோம். தேர்தல் வரட்டும் அப்போது தி.மு.க., பைல்ஸ் 3 வெளியிடப்படும்.

பைல்ஸ்-3ல் கூட்டணி கட்சிகள் குறித்து கவர் பண்ணலாம் என்று இருக்கிறோம். கூட்டணி கட்சிகளும் தப்பித்து போக கூடாது. தமிழகத்தில் வரும் பல டெண்டர்கள் கூட்டணி கட்சிகள் எடுத்து கொள்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, 3 ஆண்டுக்கால டெண்டர் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இது குறித்து 2025ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் வைக்க போகிறோம். பைல்ஸ் 1 மற்றும் 2ஐ விட பைல்ஸ் 3 தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இதை மக்கள் பார்த்தாலே தெரிந்துவிடும். இவ்வளவு கோடி டெண்டரை உள்ளூர் அமைச்சரின் மச்சான் எடுத்து இருப்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மாற்று பெயரில் தமிழக அரசு அமல்படுத்துகிறது. ஆதி திராவிடர் நலத்துறை தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. முடி திருத்துதல் குலக்கல்வி இல்லையா? திருமாவளவனுக்கு திடீரென்று கோபம் வந்துருச்சி. விடுதலை சிறுத்தைக் கட்சியை வழிநடத்துவது யார் என்று கேட்டேன்?

கட்சியின் கண்ட்ரோல் கடந்த 15 நாட்களாக திருமாவளவன் கையில் இல்லை. நீங்கெல்லாம் எங்கள பத்தி பேசலாமா? இந்தியாவின் மிகப்பெரிய கட்சி பா.ஜ., இதனால் விடுதலை சிறுத்தைக் கட்சியோடு பா.ஜ.,வை கம்பேர் பண்ணி பேசும் அளவுக்கு கீழே போகவில்லை. 18 கோடி உறுப்பினர்கள் இருக்கும் கட்சி பா.ஜ.,. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...