இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் – பிரதமர் மோடி

வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு முதல்வர் பஜன்லால் ஷர்மா மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர். ராஜஸ்தானில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. பா.ஜ., நல்லாட்சியின் அடையாளமாக மாறுகின்றன.

கட்சி தனது தீர்மானங்களை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது. ராஜஸ்தானில் இன்று நடக்கும் நவீன வளர்ச்சிப் பணிகள் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது வளர்ச்சி அடைந்த மாநிலத்தை உருவாக்க உதவும். ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியாவும் வேகமாக வளரும். வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்.

கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பா.ஜ., தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிகவும் முக்கியம். ராஜஸ்தானில் மின்சாரத் துறையில் பா.ஜ., அரசு பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதனால் நமது விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...