அண்ணல் அம்பேத்கரை அவமதித்தவர்கள் பேசுகிறார்கள்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நத்தை வேகத்தில் ஊர்ந்து காலதாமதம் ஏற்படுத்துவது போலவும் அதை வேகப்படுத்த அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் கோபம் கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களை சாட்டையால் அடிப்பது போலவும் 1950 ஆம் ஆண்டு கேலிச்சித்திரம் வரைந்த கேசவ் சங்கர் பிள்ளை என்பவர் Children’s Book Trust என்கிற புத்தகத்தில் அச்சித்திரத்தை அச்சிட்டு வெளியிட்டார்.
அண்ணலை அவமதித்த கேசவ் சங்கர் பிள்ளைக்கு காங்கிரஸ் அரசு 1956 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1966 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 1976 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கெளரவித்தது. அதுமட்டுமல்ல மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (UPA-2) அந்த கேலிச்சித்திரத்தை NCERT பாடத்திட்டத்தில் சேர்த்தது. அந்த கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்க அனுமதி மறுத்த அதே காங்கிரஸ் தான் அவரது கேலிச்சித்திரத்தை NCERT பாடத்திட்டத்தில் வைக்க அனுமதி அளித்தது.
அண்ணல் அம்பேத்கரை கேலிச்சித்திரம் வரைந்து அவமதித்தவருக்கு அடுத்தடுத்து மூன்று விருதுகள் வழங்கியும், அண்ணலின் கேலிச்சித்திரத்தை பாடத்திட்டத்தில் சேர்த்து அவமதித்தும் அவரது புகழுக்கு களங்கம் விளைவித்த கேடுகெட்ட காங்கிரஸ் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரை திரும்ப திரும்ப உச்சரிப்பது அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கு செய்யும் முயற்சியேயன்றி வேறொன்றும் இல்லை.
இந்தியாவில் இதுவரை நடந்த தீண்டாமை கொடுமைகளில் உச்சபட்ச தீண்டாமையே இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி ஏற்று பிரதமரான ஒருவர் சாட்டையால் அடிப்பது போன்ற கேலிச்சித்திரத்தை வரைந்தவருக்கு மூன்று முறை விருது கொடுத்ததும், அந்த கேலிச்சித்திரத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி கொடுத்ததும் தான்.
                                                                                                                          –  நன்றி ப.ஜ.க மூத்த தலைவர் H. ராஜா             

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...