” 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 வன்முறை சம்பவங்களும், பாகிஸ்தானில் 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது, ” என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக
2022 ல் 47
2023 ல் 302
2024 டிச., 08 வரை 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுவே பாகிஸ்தானில்
2022 ல் 241
2023 ல் 103
2024 அக்., வரை 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த சம்பவங்கள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வங்கதேச அரசுடன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தூதரக ரீதியில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மத சகிப்புத்தன்மை, மதவெறி வன்முறை, முறையான துன்புறுத்தல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளோம். மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை சர்வதேச அரங்குகளில் இந்தியா எடுத்துக் காட்டுகிறது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தவிர, வேறு எந்த அண்டை நாட்டிலும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |