வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
புனேவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீண்ட காலமாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனை உலக நாடுகளுக்கும் கொண்டு சென்றால், நம்முடைய நாடு தான் முன்மாதிரியான நாடாக திகழும். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்து தலைவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் செய்வார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். அது ஏற்றுக்க முடியாதது.
அயோத்தி ராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை. எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னையை கிளப்புகிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இது தொடர அனுமதிக்கக் கூடாது. நம்மால் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்தியர்கள் முன்பு செய்த தவறுகளை சரி செய்து விட்டு, உலக நாடுகளில் இந்தியாவை முன்மாதிரியான நாடாக மாற்ற பணியாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நம்முடைய நாடு இயங்கி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு வழிநடத்துகிறது. மேலாதிக்கத்தின் நாட்கள் முடிந்து விட்டது, எனக் கூறினார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |