.’ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்’, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடியை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., விஷால் சிகா இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பான போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த விஷால் சிகா, ‘பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். நம் நாட்டு மக்களிடம் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த புரிதல் உள்ளது. மக்களை மேம்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினோம்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவை டேக் செய்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, ‘உண்மையிலான மிகுந்த ஆழமான கலந்துரையாடல். ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதை பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்’, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |