பிரதமர் மோடியுடன் தொழிலதிபருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவருக்கிடையே நடந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரைசினா மாநாடு ஆண்டுதோறும் டில்லியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள் மட்டுமல்லாது, வணிகர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு ரைசினா மாநாடு நடந்து வருகிறது. இதில், பங்கேற்பதற்காக, மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேஸ்ட் இந்தியா வந்துள்ளார்.

இந்த வருகையின் போது மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, டில்லியில் பிரதமர் மோடியை பில்கேட்ஸ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், ‘எப்போதுமே பில்கேட்ஸை சந்தித்து பேசுவது சிறப்பானதாக இருக்கும். இன்றைய சந்திப்பின் போது, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது,’ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, பில்கேட்ஸ் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிறப்பான விவாதம் நடத்தப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுமையினால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...