யமுனை நீர் விஷமானது என்று கூறிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தேச விரோதி என, பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்தார்.
கிருஷ்ணா நகரில் நடந்த தேர்தல் பேரணியில் அவர் ஆற்றிய உரை:
யமுனையில் ஹரியானா விஷத்தைக் கலக்கிறது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு தேச விரோதி. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக டில்லி மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
டில்லி மற்றும் ஹரியானா மக்களை ஒருவருக்கொருவர் எதிராக அவர் நிறுத்துகிறார். மக்களிடையே பீதியை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். அவர் அரசியலில் இருக்க தகுதியற்றவர்.
யமுனை சுத்தம் செய்யும் திட்டங்களில் ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி அரசு 8,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. யமுனையை சுத்தப்படுத்தும் விவகாரம், ஆம் ஆத்மி அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
டில்லியில் பா.ஜ., அரசு அமைக்க நீங்கள் முடிவு செய்துள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இது சாதாரண தேர்தல் அல்ல; டில்லியின் தலைவிதியையும் பிம்பத்தையும் மாற்றுவதற்கான தேர்தல் இது. இந்தத் தேர்தல், ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து டில்லியை விடுவிப்பது பற்றியது.
டில்லி பேருந்துகளில் அபாய பொத்தான்களை பொருத்தியதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. இந்த விவகாரத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ‘ஷீஷ் மஹாலி’ல் தான் அபாய பொத்தான் பொருத்த வேண்டும். அங்குதான் பெண்களுக்கு அவமதிப்பு நடந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |