கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம்

‘கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா?’ என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பயிர்க் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். தி.மு.க., ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை.

கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். தி.மு.க.,வில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 – 2022 முதல் 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு தி.மு.க.,வினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே?

நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும். நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...