அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்த கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை, டில்லியில் நேற்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இரு நாட்கள் அரசு முறை பயணமாக, நம் நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்த மேற்காசிய நாடான கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானிக்கு, தலைநகர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பில், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், நிர்லமா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, இந்தியா – கத்தார் இடையே, வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, எரிசக்தி, உணவு பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட விவகாரங்களில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வருமான வரிகள் தொடர்பான நிதி மோசடியை தடுக்கவும் இரு நாடுகளும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது, இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நிறுவுவதற்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |